உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பதப்படுத்திய உணவுப் பொருட்கள் ஏற்றுமதி: கருத்தரங்கில் வழிகாட்டல்

பதப்படுத்திய உணவுப் பொருட்கள் ஏற்றுமதி: கருத்தரங்கில் வழிகாட்டல்

பொள்ளாச்சி,- வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாடு குறித்து, தொழில்முனைவோருக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.பொள்ளாச்சி அடுத்துள்ள, மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்வி நிறுவனம், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் சார்பில் 'வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி மேம்பாடு' குறித்த பயிலரங்கம், தனியார் ஓட்டலில் நடந்தது.வாணவராயர் வேளாண் கல்வி நிறுவன இயக்குனர் கெம்புசெட்டி, தலைமை வகித்தார். முன்னதாக, இணை பேராசிரியர் காளிதாஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, கோவை தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமலாராவ் கலந்து கொண்டார்.தொடர்ந்து, வேளாண் விளைபொருட்களின் ஏற்றுமதி முக்கியத்துவம், இறக்குமதியாளர் ஏற்றுமதியாளர் குறியீடு மற்றும் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்தின் திட்டங்கள், வருங்கால திட்டங்கள் என, பல்வேறு தலைப்புகளின் கீழ் பேசினர்.மேலும், காணொலி காட்சி வாயிலாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் பதிவு செய்யும் வழிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.கோவை வெளிநாட்டு வர்த்தக இயக்குனரக துணை மேலாளர் ஆனந்த்மோகன்மிஸ்ரா, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் துணை மேலாளர் முத்தையா, உழவர் உற்பத்தியாளர் நிறுவன பிரதிநிதிகள், தொழில்முனைவோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வாணவராயர் வேளாண் கல்வி நிறுவன ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ