உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊழியர் மீது வழக்குப்பதிவு

ஊழியர் மீது வழக்குப்பதிவு

கோவை:ரேஷன் கடையில் ரூ.1.22 லட்சத்தை திருடிய ஊழியர் மீது, போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.கோவை நகரின் பல பகுதிகளில் அமுதம் கூட்டுறவு அங்காடி மூலம் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கோவை சாய்பாபா காலனியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில், வேடப்பட்டியை சேர்ந்த மதியரசு, 45, விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். கடையில் விற்பனையான தொகை குறித்த கணக்கு வழக்குகளை, அமுதம் அங்காடியின் சூப்பர்வைசர் சுரேஷ்குமார் சரி பார்த்தார்.அப்போது விற்பனையான தொகையில் ரூ.1.22 லட்சம் கணக்கில் வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மதியரசுவிடம் கேட்டபோது, சரியான பதில் கூறவில்லை. புகாரின் பேரில், போலீசார் மதியரசு மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை