| ADDED : ஜன 23, 2024 01:36 AM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி லதாங்கி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர், பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி, கே.கே.ஜி., திருமண மண்டபத்தில் நடந்தது.பள்ளி செயலர் ரமேஷ் ராஜ்குமார், தாளாளர் சாந்திதேவி, நிர்வாக இயக்குனர் ரிதன்யா முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஸ்ரீஜா வரவேற்றார். அறங்காவலர் உமாதேவி உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். கோவை மங்கையர்கரசியார் அறநெறி அறக்கட்டளை வாயிலாக, ஒன்பது சிவனடியார்கள் கொண்ட குழுவினரால் தமிழ் முறைப்படி நடத்தப்பட்டது.மாணவ, மாணவியர், தங்களுடைய பெற்றோர்களின் பாதங்களுக்கு பூஜை செய்து சந்தனம் மற்றும் குங்குமம் பொட்டிட்டு, போற்றிகள் கூறி மலர் துாவி அர்ச்சனை செய்து ஆராதித்தனர். ஆசிரியர்களிடமும் ஆசியை பெற்றனர்.தொடர்ந்து, வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நன்னெறிகளை ஏற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.பாத பூஜையின் முக்கியத்துவம், தாய், தந்தையின் அன்பு, பாசம், பெற்றோர்களை எப்படி கவனித்துக்கொள்ள வேண்டும், அவர்களிடம் காட்ட வேண்டிய அடிப்படை உணர்வுகள், கடமைகள் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என விளக்கப்பட்டது.