உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நடைபாதை ஆக்கிரமிப்புகளால் நஞ்சப்பா ரோட்டில் அவஸ்தை

 நடைபாதை ஆக்கிரமிப்புகளால் நஞ்சப்பா ரோட்டில் அவஸ்தை

கோவை: காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டின் இருபுறமும், பொருட்கள் வாங்க வருவோர் மற்றும் கடை ஊழியர்களின் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. நடைபாதையிலும் கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பு நிரந்தரமாகி விட்டது. பொருட்களை நடைபாதையில் அடுக்கி வைத்திருக்கின்றனர். சில கடைக்காரர்கள் போர்டு வைத்து மறைத்திருக்கின்றனர். நடைபாதையில் நடக்க வசதியில்லாததால், பாதசாரிகள் ரோட்டில் செல்கின்றனர். கார்களில் வருவோரும் ஆங்காங்கே நிறுத்தி வைத்திருப்பதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அடிக்கடி சின்ன சின்ன விபத்துகள் ஏற்படுகின்றன. காந்திபுரத்தில் இருந்து நஞ்சப்பா ரோட்டில் வரும் வாகன ஓட்டிகள், காட்டூருக்கு செல்ல வழியில்லாததால், அவிநாசி ரோடு சந்திப்பு சென்று, விதிமுறையை மீறி, 'யூ டேர்ன்' செய்து, திரும்பி வருகின்றனர். அவ்வாறு வரும்போது, மேம்பாலத்தில் இருந்தும், சுரங்கப் பாதையில் இருந்தும் வரும் வாகனங்களுடன் மோதிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இப்பிரச்னைக்கு போக்குவரத்து போலீசார் விரைந்து தீர்வு காண வேண்டும். நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ