உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கொங்கு நாட்டில் பாண்டியரின் காலடி

 கொங்கு நாட்டில் பாண்டியரின் காலடி

12ம் நுாற்றாண்டில், கொங்கு நாட்டின் தெற்குப் பகுதிக்குள், பாண்டியரின் செல்வாக்கு மெதுவாக அதிகரிக்கத் தொடங்கியது. மதுரையை ஆட்சி செய்த முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், தனது படையெடுப்பில் சோழநாட்டைத் தாண்டி ஸ்ரீரங்கம், சிதம்பரம் வரை சென்று வெற்றி கொண்டவன். அந்த வெற்றிக் குதிரையில் வந்தபோது, அவன் கொங்குநாட்டிலும் காலடி வைத்தான். புதிய பகுதியை ஆளும் வழக்கப்படி, அவன் கொங்குநாட்டுக்கு ஒரு பிரதிநிதியை நியமித்து திரும்பி விட்டான். அந்த பிரதிநிதியின் வம்சத்தவரே, பின்னாளில் 'கொங்கு பாண்டியர்' என அழைக்கப்பட்டனர். 1265-1285 இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்த வீரபாண்டியன், கொங்கு பாண்டியரிலேயே சிறந்தவர். அவருக்கு பின் வந்த, மற்றொரு சுந்தர பாண்டியன் காலத்தில்தான், அவிநாசியில் சிவன் கோயில் கட்டப்பட்டதாக, உள்ளூர் வரலாறு கூறுகிறது. சுந்தர மூர்த்திகள், முதலை வாயில் சிக்கிய சிறுவனை பதிகம் பாடி மீட்ட அற்புதம் நடந்த குளக்கரையே, அந்த ஆலயத்தின் தளம். அந்த காலத்துப் பாண்டியர்கள், கொங்கு நாட்டின் நிர்வாகத்தையும் கவனித்தனர். குறிப்பாக, சூலுார் (சூரலூர்) பகுதியில் நொய்யல் ஆற்றுக்கான அணைக்கட்டுகள், வாய்க்கால்கள், குளங்கள் போன்றவற்றை பராமரிக்க, அதிகாரிகளை நியமித்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கோவை மாவட்டத்தின் மேற்கு, வடக்கு பகுதிகளில் இருக்கும் 'வீரபாண்டி' என்ற பெயருடைய ஊர்கள், வீரபாண்டியனின் காலத்தில் உருவானவை என்று அறியப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ