உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சோலார் மின் வேலிகளில் வனத்துறை பரிசோதனை

 சோலார் மின் வேலிகளில் வனத்துறை பரிசோதனை

மேட்டுப்பாளையம்: -: மேட்டுப்பாளையம் வனப்பகுதியையொட்டியுள்ள பகுதிகளில், சட்டவிரோதமாக சோலார் மின் வேலிகளில், மின்சாரம் செலுத்தப்படுகிறதா என வனத்துறையினர் ஆய்வு செய்தனர். மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை, வாழை, பாக்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தேக்கம்பட்டி, ஓடந்துறை, சமயபுரம், ஊட்டி சாலை, கோத்தகிரி சாலை உள்ளிட்ட வனப்பகுதியையொட்டி உள்ள பல்வேறு பகுதிகளில் காட்டு யானை, காட்டுப் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் தொந்தரவு அதிகம் உள்ளது. வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகாமல் இருக்க, இப்பகுதிகளில் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. யானைகள் அதனை மிகவும் சுலபமாக மிதித்தும், மரக்கிளைகளை தூக்கி வீசியும் சேதப்படுத்தி விளை நிலங்களுக்கு சென்று பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றன. அதனால் சில இடங்களில் சோலார் மின் வேலிகளில், தொங்கு சோலார் மின் வேலி வகைகளை விவசாயிகள் பலரும் உபயோகித்து வருகின்றனர். நேரடி மின்சாரம் மின்வேலியில் சட்டவிரோதமாக பாய்ச்சப்படுகிறதா என மேட்டுப்பாளையம் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். வனவர் சிங்காரவேலு கூறுகையில், சோலார் மின் வேலிகளில், அனுமதித்த அளவே அதில் மின் அழுத்தம் இருக்க வேண்டும். நேரடியாக மின்சாரம் செலுத்தக்கூடாது. அவ்வாறு நடக்கிறதா என்பதை, மின் அளவை கணக்கீடும் கருவியால் சோதிக்கிறோம். நேரடி மின்சாரம் செலுத்தப்பட்டிருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி