உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயிலில் பணத்துடன் தவறவிட்ட கைப்பை கிடைத்தது

ரயிலில் பணத்துடன் தவறவிட்ட கைப்பை கிடைத்தது

கோவை:சென்னை - கோவை வாராந்திர சிறப்பு விரைவு ரயிலில் (12681) கடந்த 9ம் தேதி பயணித்த பயணி ஒருவர் ரூ.21 ஆயிரம் பணத்துடன் தனது கைப்பையை இழந்தார். அவருக்கு அருகில் மற்றொரு பை கிடந்தது.அந்த பயணி, ரயில்வேயின் ஆன்லைன் குறை தீர்க்கும் கருவி (Rail Madad) மூலம் புகார் பதிவு செய்தார்.சேலம் கோட்டத்தின் புகார் தீர்வு பிரிவு அதிகாரிகள்விசாரணையில், புகார்தாரரின் பையை அதே பெட்டியில் பயணித்த, சக பயணி ஒருவர் தவறுதலாக எடுத்துச் சென்றது தெரியவந்தது.அவரது பையில் கிடைத்த ஆதாரங்களை கொண்டு, அந்த பயணியை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்த கைப்பையை மீட்டு, இழந்தவரிடம் ஒப்படைத்தனர்.கண்காணிப்பாளர் முல்லை அரசு, வணிக எழுத்தர் தினேஷ்குமார் மற்றும் துணை நிலைய மேலாளர் சதீஷ் சகதேவ் ஆகியோரை, சேலம் கோட்டஅதிகாரிகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை