உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிரதமர் நல நிதியிலிருந்து இலவச தாய் சேய் ஊர்தி

பிரதமர் நல நிதியிலிருந்து இலவச தாய் சேய் ஊர்தி

வால்பாறை:பிரதமர் நிதியிலிருந்து வால்பாறை அரசு மருத்துவமனைக்கு, இலவச தாய், சேய் ஊர்தி வழங்கப்பட்டது.மத்திய அரசின் தாய், சேய் பாதுகாப்பு திட்டத்தின் கீழ்,பிரதமர் நல நிதியிலிருந்து, நாடு முழுவதும் உள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அரசு மருத்துவமனைக்கு இலவச தாய், சேய் ஊர்தி வழங்கி வருகிறது.வால்பாறை மலைப்பகுதியில் பிரசவித்த தாய்மார்களை வீடுகளில் இருந்தே இலவசமாக அழைத்து செல்லும் வகையில் மத்திய அரசு, '102' ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளது.கோவையில் நடந்த விழாவில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், புதிய ஆம்புலன்சை துவக்கி வைத்தார். வால்பாறை வந்த இலவச தாய், சேய் ஊர்தியை, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நித்யா மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் வரவேற்றனர்.மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று இலவச தாய், சேய் ஊர்தி வழங்கிய மத்திய அரசுக்கு, தாய்மார்கள் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ