உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  குழாய் வாயிலாக காஸ் வினியோகம் சாட்டிலைட் உதவியுடன் ஆய்வு

 குழாய் வாயிலாக காஸ் வினியோகம் சாட்டிலைட் உதவியுடன் ஆய்வு

- நமது நிருபர் -: சென்னை, மும்பை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களை தொடர்ந்து, திருப்பூரிலும் குழாய் வாயிலாக காஸ் வினியோகம் செய்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதா என்பது குறித்து, முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாடு முழுதும், பல கோடி பேர் சமையல் காஸ் சிலிண்டர் பயன்படுத்துகின்றனர். சிலிண்டர் வாயிலாக சமையல் காஸ் வினியோகிக்கப்படுகிறது. காஸ் சிலிண்டருக்கான மானியம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. தற்போது, பூமிக்கடியில் குழாய் பதித்து வீடுகளுக்கு சமையல் காஸ் வினியோகம் செய்ய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டு, செயல்படுத்தியும் வருகின்றன. தற்போது மும்பை, திருவனந்தபுரம், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல நகரங்களில், குழாய் வாயிலாக சமையல் காஸ் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தனியார் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில், திருப்பூரிலும் நிலத்தடியில் குழாய் பதித்து, காஸ் வினியோகம் செய்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதா என, தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு பணிகள் முடிந்ததும், திட்ட அறிக்கை தயாரித்து, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை