உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கேலோ இந்தியா போட்டி உடுமலை மாணவர் பதக்கம்

கேலோ இந்தியா போட்டி உடுமலை மாணவர் பதக்கம்

உடுமலை-உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர், 'கேலோ இந்தியா' போட்டியில் களரிபயட்டில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.தேசிய அளவில் நடப்பாண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில், களரிபயட்டு போட்டி திருச்சி அண்ணா உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.இப்போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகா, டில்லி, ஹரியானா உட்பட 16 மாநிலங்களிலிருந்தும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.இதில் உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த, ஆறாம் வகுப்பு மாணவர் சுர்ஜித், சுவடுகள் பிரிவில் பங்கேற்று வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார்.தமிழகத்திலிருந்து இப்போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்ற, ஒரே விளையாட்டு வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு, ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனத்தலைவர் ராமசாமி, செயலாளர் கார்த்திக்குமார், பள்ளி முதல்வர் மாலா, களரி பயட்டு ஆசிரியர் வீரமணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ