உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிடைத்தது பொது கழிப்பிடம்! ஆதிதிராவிடர் காலனி மக்கள் மகிழ்ச்சி

கிடைத்தது பொது கழிப்பிடம்! ஆதிதிராவிடர் காலனி மக்கள் மகிழ்ச்சி

போத்தனூர்;'தினமலர்' செய்தி எதிரொலியாக, ஈச்சனாரியில் மழைநீர் சேமிப்பு வசதியுடன், ரூ.30 லட்சம் மதிப்பில் பொதுகழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது.ஈச்சனாரி அருகே மாநகராட்சியின், 97வது வார்டு பகுதியில், ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இங்குள்ள அய்யப்பா நகரில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த, சுமார் 300 பேர் வசிக்கின்றனர்.இவர்களுக்கு கழிப்பிடம் இல்லை. இயற்கை உபாதையை கழிக்க, திறந்தவெளியை பயன்படுத்தி வந்தனர். மக்கள் அனுபவிக்கும் சிரமம் குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, முன்னாள் கவுன்சிலர் மகாலிங்கம், அங்குள்ள ஓடை ஒன்றின் அருகேயுள்ள அரசு நிலத்தில், 40 சென்ட் இடத்தில் பொது கழிப்பிடம் கட்டித்தர, ராக் அமைப்பிடம் கோரிகை விடுத்தார்.அவர்கள், மிலாக்ரான் எனும் தனியார் நிறுவனத்தின் உதவியுடன், 30 லட்சம் ரூபாய் செலவில் சுமார், 700 சதுரடியில், 14 கழிவறை, நான்கு குளியலறைகளுடன் கழிப்பிடம் கட்டினர்.இக்கட்டடத்தில், 10 ஆயிரம் லிட்டர் சேமிப்பதற்கான, மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம், ஆண்டுதோறும் சுமார், 70 நாட்கள் மழைநீரை பயன்படுத்தி, கழிப்பிடத்தை தூய்மையாக பயன்படுத்த முடியும்.முன்னாள் கவுன்சிலர் மகாலிங்கம் கூறுகையில், அருகேயுள்ள காலியிடத்தில், பால்வாடி மையம், ரேஷன் கடை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்