உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மாநாட்டுக்கு சென்ற அரசு பஸ்கள் : மக்கள் சாலை மறியல் 

 மாநாட்டுக்கு சென்ற அரசு பஸ்கள் : மக்கள் சாலை மறியல் 

கோவை: தி.மு.க., சார்பில் பல்லடத்தில் நடந்த மகளிரணி மாநாட்டுக்கு, அரசு, தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டதால், பொதுமக்கள் அவதியடைந்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில், தி.மு.க., மகளிரணி மாநாடு நேற்று மாலை நடத்தப்பட்டது. இதில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, எம்.பி., கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர். இரவு 8:25க்கு விமான நிலையம் வந்த முதல்வர், சென்னை கிளம்பினார். இக்கூட்டத்தில், திரளான பொதுமக்கள் பங்கேற்க செய்ய வேண்டும் என்ற நோக்கில், ஊட்டி, கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, பல அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்கள் மற்றும் மபசல் பஸ்கள் இயக்கப்பட்டன. நகரில் இயங்கி வந்த பஸ்கள் எண்ணிக்கை குறைந்ததால், பள்ளி மாணவ, மாணவியர், பணிக்கு சென்றோர், பஸ்கள் கிடைக்காமல் அவுதி யடைந்தனர். இதேபோல சூலுாரில் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ, மாணவியர் மற்றும் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்ப ஏராளமான தொழிலாளர்கள் நேற்று மாலை சூலூர் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்தும் தங்கள் ஊருக்கு செல்லும் அரசு பஸ்கள் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், திருச்சி ரோட்டில் திடீரென மறியல் செய்தனர். இதனால், திருச்சி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வந்து மறியல் செய்தோரை அப்புறப் படுத்தி போக்குவரத்து சீராக நடவடிக்கை எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி