உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பட்டு, ஜரிகை, நுால் விலைகளை அரசு நிர்ணயம் செய்ய தீர்மானம்

பட்டு, ஜரிகை, நுால் விலைகளை அரசு நிர்ணயம் செய்ய தீர்மானம்

மேட்டுப்பாளையம்; பட்டு, ஜரிகை, நூல் ஆகியவற்றின் விலைகளை, அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறுமுகையில் அனைத்து கைத்தறி பட்டு சேலை உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் சார்பில், தேசிய கைத்தறி தின விழா நடந்தது. விழாவுக்கு சங்கத் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். செயலாளர் வெங்கடேஷ் வரவேற்றார். உதவி தலைவர் குமார், உதவி செயலர் மகேந்திரன், இணை செயலர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், 60 ஆண்டுகளுக்கு மேல் கைத்தறி நெசவுத்தொழில் செய்து வரும், சிறுமுகையை சுற்றி, 15 கிராமங்களில் உள்ள செட்டுமை, எஜமானர், ஊர் பெரியவர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கப்பட்டது. கைத்தறி தொழில் நலிவடைந்து வருவதால், இதனை மேம்படுத்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர்த்த வேண்டும்.கைத்தறி நெசவுத் தொழிலுக்கு தேவையான மூலப்பொருள்களான பட்டு, ஜரிகை, நூல் ஆகியவற்றின் விலைகளை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். சிறுமுகை நீலிபாளையம் ரவுண்டானாவில் கைத்தறி நெசவாளர் சிலை வைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவில் சங்க நிர்வாகிகள், கைத்தறி நெசவாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். சங்க பொருளாளர் தண்டபாணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை