உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நேதாஜி பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு உதவி 

நேதாஜி பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு உதவி 

மடத்துக்குளம்: மடத்துக்குளத்தில் அகில இந்திய பார்வார்டு ப்ளாக் கட்சி சார்பில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.முதலில், மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட் அருகே, கட்சிக்கொடியேற்றி, அவரது உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து, மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு பேனா, பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, மடத்துக்குளம் ஒன்றிய பார்வார்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ