| ADDED : ஜன 29, 2024 12:35 AM
போத்தனூர்:போத்தனூர், செட்டிபாளையம் சாலையில் மாநகராட்சி கழிவுநீர் பண்ணை வளாகம் உள்ளது. இதன் ஒரு பகுதியில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவு கொட்டப்படுகிறது.சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர் மாசு, தொற்று நோய் பாதிப்பு, ஈ, கொசு தொல்லை, துர்நாற்றம் போன்றவற்றால் மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இதனை அகற்றக்கோரி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இச்சூழலில், தற்போது ஈச்சனாரி -- செட்டிபாளையம் சாலைக்கான இணைப்பு சாலையில், சாரதாம்மாள் லே -- அவுட்டில் குப்பைக்கழிவு கொட்டப்படுகிறது.குறிப்பாக, கேரள மாநிலம், திருவனந்தபுரம், எர்ணாகுளம் பகுதிகளிலிருந்து மருத்துவ கழிவு கொட்டப்பட்டுள்ளது. சுற்றுப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.இரவு நேரத்தில் கொட்டப்படும் இக்கழிவால், அப்பகுதியில் மற்றுமொரு குப்பை கிடங்கு உருவாகிறது. அதிகாரிகள் உடனடியாக, நடவடிக்கை எடுக்க வேண்டும்.