உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: சின்மயா மிஷன் விக்னேஷ் சைதன்யா பேச்சு

இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: சின்மயா மிஷன் விக்னேஷ் சைதன்யா பேச்சு

கோவை; கோவை குஜராத்தி சமாஜ் ஹாலில், கோவை வங்க தேச இந்து உரிமை மீட்பு குழு சார்பில், வங்க தேச இந்துக்களின் மீதான மனித உரிமை மீறல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சின்மயா மிஷன் விக்னேஷ் சைதன்யா பேசுகையில், ''இந்து மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்துக்கள் சேர்ந்து இருந்தால் அது ஒரு சக்தி. இந்து நிறுவனங்களுக்கும், மக்களுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். வங்க தேச பிரச்னையை, சமூக வலைதளங்களில் மட்டும் பதிவிட்டால் எதுவும் நடக்காது. வங்க தேச இந்து மக்களுக்காக, இந்திய அரசிடம் பேச வேண்டும்,'' என்றார்.தேசிய சிந்தனைப் பேரவை, தென் பாரத அமைப்பாளர் விஸ்வநாதன் பேசுகையில், ''வங்க தேசத்தில் உள்ள சிறுபான்மை மக்களின் பிரச்னைகளையும், மனித உரிமையையும் மீட்டு கொடுக்க வேண்டும். வங்க தேச இந்து மக்களுக்காக, போராடி வந்த இஸ்கான் துறவி சின்மயா கிருஷ்ண பிரபு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்ய மத்திய அரசு தலையிட வேண்டும்.கோவை மற்றும் திருப்பூரில் பணிபுரியும், வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், பதிவு செய்ய வேண்டும். இல்லை என்றால் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை. வங்க தேச பிரச்னையில், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.நிகழ்ச்சியில், நுாறுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை