உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.85 ஆயிரம் பணம் செலுத்தினால் மட்டுமே வீடு! மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் பேரதிர்ச்சி

ரூ.85 ஆயிரம் பணம் செலுத்தினால் மட்டுமே வீடு! மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் பேரதிர்ச்சி

கோவை;கோவை மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கான குடியிருப்பு, சித்தாபுதுாரில் இருந்தது; 216 குடும்பத்தினர் வசித்தனர்.இவர்களுக்கு அதே பகுதியில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 2018ல் ரூ.19.5 கோடியில், ஏழு மாடிகளுடன் இரண்டு பிளாக்குகளாக, 224 குடியிருப்புகள் கட்டும் திட்டம் துவக்கப்பட்டது; 15 மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.அதற்குள் பணியை முடிக்க முடியாததால், திட்ட மதிப்பீடு ரூ.22.27 கோடியாக உயர்ந்தது. தற்போது கட்டுமான பணி முடிந்து, திறந்து வைக்கப்பட்டது.துாய்மை பணியாளர்கள் வீடு ஒதுக்கீடு பெற, ஒவ்வொருவரும், 85 ஆயிரத்து, 500 ரூபாய் செலுத்த வேண்டும். பராமரிப்பு கட்டணமாக மாதத்துக்கு ரூ.750 வீதம் மூன்று மாதத்துக்கு ரூ.2,250, சொத்து வரி ரூ.1,153 செலுத்த வேண்டுமென கூறியிருப்பது, பயனாளிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இதுதவிர, மின்வாரியத்தின் மின் இணைப்பு பெற வைப்புத்தொகை செலுத்துவது மற்றும் இதர கட்டணம் செலுத்துவதற்கு வாரியம் பொறுப்பேற்காது.சொத்து வரி, குடிநீர் கட்டணம் மற்றும் இதர வரியினங்களை ஒதுக்கீடுதாரர்களே சம்பந்தப்பட்ட துறைக்கு செலுத்த வேண்டும்.மாதந்தோறும், 10ம் தேதிக்குள் பராமரிப்பு கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும் என நிபந்தனை விதித்திருப்பது, துாய்மை பணியாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.ஏனெனில், சித்தாபுதுாரில் வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில், 30 ஆண்டுகளுக்கு மேலாக, துாய்மை பணியாளர்கள் வசித்து வந்தனர். 2018ல் அவர்கள் வசித்த வீட்டை காலி செய்துதான் இடம் பெறப்பட்டு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.அதே இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, ஏற்கனவே வசித்து வருவோருக்கே ஒதுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டு, அனைத்து குடும்பத்தினருக்கும் புகைப்படத்துடன் கூடிய உத்தரவு நகல், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (அப்போதைய, குடிசை மாற்று வாரியம்) சார்பில் வழங்கப்பட்டது.அதை மறந்து விட்டு, இப்போது பணம் செலுத்தினால் மட்டுமே ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்படும் என கூறுவதால், அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதுதொடர்பாக, சித்தாபுதுார் வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நலச்சங்கத்தினர், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில், டி.ஆர்.ஓ., ஷர்மிளாவிடம் மனு கொடுத்தனர். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

பணம் செலுத்தியாக வேண்டும்

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பயனாளிகளாக உள்ள துாய்மை பணியாளர்கள், அ.தி.மு.க., ஆட்சியில் கொடுத்த உத்தரவு நகல் வைத்திருக்கின்றனர். வீடு ஒதுக்கீடு பெற வேண்டுமெனில், கண்டிப்பாக பயனாளிகள் பங்குத்தொகை செலுத்தியாக வேண்டும். இதுவரை, 42 பயனாளிகள் பணம் செலுத்தி, ஒதுக்கீடு பெற்றுள்ளனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ