உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் குதிரையேற்ற போட்டி : சென்னை புல்ஸ் அணி வெற்றி

கோவையில் குதிரையேற்ற போட்டி : சென்னை புல்ஸ் அணி வெற்றி

கோவை; கோவை, வெள்ளானைப்பட்டி அடுத்த மோளப்பாளையத்தில், தேசிய அளவிலான 'இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்' குதிரையேற்ற போட்டி கடந்த மூன்று நாட்கள் நடந்தது.இக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இண்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி(தமிழ்நாடு) ஆகியன இணைந்து நடத்திய இப்போட்டியில் ஆறு அணிகள் பங்கேற்றன.சென்னை புல்ஸ்(தமிழ் நாடு), பெகாசஸ் ஸ்போர்ட்ஸ்(கேரளா), பெங்களூரு நைட்ஸ்(கர்நாடகா), கோல்கொண்டா சார்ஜ்ர்ஸ்(தெலுங்கானா), குவாண்டம் ரெய்ன்ஸ்(கோவா) மற்றும் எலீட் இக்வெஸ்ட்ரியன்ஸ்(மேற்கு வங்கம்) ஆகிய அணிகளில் தலா ஆறு வீரர்கள் பங்கேற்று அசத்தினர். தடை தாண்டுதல் போட்டிகள், 110 செ.மீ., மற்றும், 120 செ.மீ., என இரு பிரிவுகளில் நடந்தது. இறுதிப்போட்டிகள் நேற்று இடம்பெற்றன. நிறைவில், சென்னை புல்ஸ் அணி முதலிடம் பிடித்து ரூ.15 லட்சம் பரிசுத்தொகையை வென்றது.பெகாசஸ் ஸ்போர்ட்ஸ் அணி இரண்டாவது இடம் வென்று ரூ.10 லட்சமும், கோல்கொண்டா சார்ஜ்ர்ஸ் அணி மூன்றாம் இடம் பிடித்து ரூ.5 லட்சம் பரிசுத்தொகையையும் வென்றன. சாரு குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் சாமியப்பன் பரிசுகள் வழங்கினார். இண்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி(தமிழ்நாடு) தலைவர் சக்தி பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை