உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சத்து மாத்திரை உட்கொண்ட பள்ளி சிறுமி இறந்தது எப்படி? மாவட்ட சுகாதார துறை விளக்கம்

சத்து மாத்திரை உட்கொண்ட பள்ளி சிறுமி இறந்தது எப்படி? மாவட்ட சுகாதார துறை விளக்கம்

கோவை;மாணவர்களுக்கான சத்து மாத்திரைகளை உட்கொள்வது குறித்த, முறையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக, சுகாதார துறை தெரிவித்துள்ளது.ஊட்டச்சத்து இன்மையால் குழந்தைகள் ரத்தசோகை, எலும்பு பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். பொது சுகாதாரத் துறை சார்பில், மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழங்கப்படும் மாத்திரைகள், சில சமயம் அவர்களின் உயிரை பறிக்கும் விஷமாக மாறி விடுகிறது.கடந்தாண்டு மார்ச் மாதம், நீலகிரி மாவட்டத்தில் அரசு பள்ளியில் ஊட்டச்சத்து மாத்திரைகளை அதிகம் உட்கொண்ட ஒரு மாணவி உயிரிழந்தார். இதேபோல், நேற்று முன் தினம் சிங்காநல்லுாரில் பள்ளி மாணவி ஒருவர், சத்து மாத்திரைகளை அதிகளவு உட்கொண்டதால் உயிரிழந்துள்ளார். பள்ளிகளில் கொடுக்கப்படும் மாத்திரை, அதிகளவு மாணவி கையில் கிடைத்தது குறித்து கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய மாத்திரைகளை வீட்டுக்கு எடுத்து செல்ல அனுமதியில்லை.மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:சத்து மாத்திரைகளை மாணவர்களுக்கு வழங்குவது குறித்த, முறையான வழிகாட்டுதல்கள் ஒவ்வொரு பள்ளி ஆசிரியருக்கும் வழங்கப்பட்டுள்ளன. சத்து மாத்திரைகளை, மாணவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதியில்லை. பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின்படியே, மாத்திரைகள் வழங்கப்படும். மதிய உணவுக்குப் பின், மாணவர்கள் உட்கொள்ள மாத்திரைகளை ஆசிரியர்கள் வழங்குவர்.அவர்கள் கண்காணிப்பிலேயே, மாணவர்கள் அவற்றை உட்கொள்ள வேண்டும். சிங்காநல்லுார் சிறுமிக்கு அதிகளவு மாத்திரைகள் கிடைத்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், சிறுமியின் உறவினருக்கு கொடுக்கப்பட்ட சத்து மாத்திரைகளை, சிறுமி உட்கொண்டது தெரிய வந்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை