உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிரதமரின் வீடு கட்டும் திட்டம்: எப்படி விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் வீடு கட்டும் திட்டம்: எப்படி விண்ணப்பிக்கலாம்

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய அரசு கிராமப்புற பகுதிகளில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை மாற்ற, அவர்களுக்கு உறுதியான வீடுகளைக் கட்டி வழங்கி வருகிறது.பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டம், 2015 ஜூன் 25 அன்று நம் நாட்டின் ஒவ்வொரு ஏழைகளுக்கும் வீடு கிடைக்கச்செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் துவங்கப்பட்டது.திட்டத்தின் கீழ், வீடு கட்ட பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் இதுவரை 3.04 கோடிக்கும் அதிகமான உறுதியான வீடுகள் கிராமப்புற பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன.இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளில் 75 சதவீதம், ஏழை மற்றும் பின்தங்கிய சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் 'ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் வீடு பெற எளிதாக விண்ணப்பிக்கலாம். மேலும், 2024ம் ஆண்டுக்குள் சுமார் 2.95 கோடி நிரந்தர வீடுகளை கட்டித் தர வேண்டும் என்பதையும் அரசு நோக்கமாக கொண்டுள்ளது.திட்டத்தின் கீழ் வீடு பெற, சில நிபந்தனைகள் உள்ளது. முதற்கட்டமாக, பொருளாதாரத்தில் பின் தங்கிய அதாவது ஆண்டு வருமானம், 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்கள் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். முதலில் 'PMAwasYojana' என்ற இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் 'சிட்டிசன் அசஸ்மென்ட்' என்ற பகுதியை கிளிக் செய்து, நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.அடுத்து வரும் பக்கத்தில் ஆதார் உள்ளிட்ட உங்களது அனைத்து வகையான விவரங்களையும் உள்ளீடு செய்து பதிவு செய்ய வேண்டும். அதன் பின் நமக்கு விண்ணப்பம் ஏற்றுக் கொண்டதற்கிணங்க ஒப்புகை சீட்டு வரும். அதை அப்படியே பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sathish Ramaiyan
நவ 06, 2024 23:53

ஹவுஸ் லோனே வேண்டும்


Neslon Neslon
ஜூலை 22, 2024 19:09

எங்க ஊரில் பாரத பிரதமர் வீடு இல்லை வீடு இல்லாதவர்கள் 20 வீடுகள் வேண்டும் திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பனியன்சேரி சின்ன காலனி இது வரியா எங்களுக்குன்னு கவர்மெண்ட்ல இருந்து வரவில்லை எத்தனையோ பேர் போய் கேட்டாளா போட்டவங்களுக்கு போட்டு இருக்காங்க வீடுகள் இது வந்து மக்களுக்கு நமது பிஜேபியின் கட்சியின் கட்சி மூலமாக மக்களுக்கு வீடுகள் காப்பீட்டு திட்டம் விவசாய நிலங்களுக்கு திட்டங்களை பணிகளை செய்ய வேண்டாம்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை