| ADDED : மார் 06, 2024 09:09 PM
கோவை பிரீமியர் மில்ஸ் குழும நிறுவனங்கள் சார்பில், காந்தி நுாற்றாண்டு நினைவு பள்ளியில் கட்டப்பட்ட, புதிய வகுப்பறைகள் திறந்துவைக்கப்பட்டன.வரதராஜபுரத்தில் உள்ள காந்தி நுாற்றாண்டு நினைவு பள்ளியில், ரூ.4 கோடி மதிப்பீட்டில், 13 வகுப்பறைகள் கொண்ட, புதிய கட்டடம் பிரீமியர் மில்ஸ் குழும நிறுவனங்கள் சார்பில் கட்டித்தரப்பட்டது. இக்கட்டடத்தை, கோவை டி.ஐ.ஜி., சரவண சுந்தர், மாணவர்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைத்தார்.பின்னர் அவர் பேசுகையில், ''காற்றோட்டமான சூழலில் அமைந்துள்ள, அழகிய வகுப்பறைகள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கல்வி சார்ந்த பயன்பாட்டுக்கு மட்டுமே, மொபைல் போன்களை மாணவர்களுக்கு கொடுத்து பெற்றோர், ஆசிரியர்கள் பழக்க வேண்டும்,'' என்றார்.பிரீமியர் மில்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் ஜெகதீஷ் சந்திரன், இயக்குனர் கவிதா, பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.