உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்க தொகை

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்க தொகை

கருமத்தம்பட்டி; பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்தாண்டு நடந்த பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, எல்ஆர்டி நிறுவனம் சார்பில், ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 10 ஆண்டுகளாக பரிசுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பள்ளி வளாகத்தில், தலைமையாசிரியர் செந்தில்குமார் தலைமையில் விழா நடந்தது. நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு பிரிவு அதிகாரி ஜேம்ஸ், அனு கீர்த்திகா ஆகியோர், பிளஸ் 2 மாணவிகள் ராதிகா, சங்கீதா, கோமதி ஆகியோருக்கும், 10 வகுப்பு மாணவர்கள், சுவாதி, நாத ஸ்ரீ, நிரஞ்சன், ரூபிகன்,விதுரா, திவாகர் ஆகியோருக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர். உதவி தலைமையாசிரியர் முரளி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஆசிரியர் தங்கவேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ