மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரிகளில் சுதந்திர தின விழா
16-Aug-2025
கோவை; ஆர்.எஸ்.புரத்தில் உள்ள, நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைவர் மஹாவீர்போத்ரா, துணை தலைவர் கமலேஷ் சி பாப்னா தேசியக்கொடி ஏற்றினர். பள்ளியின் என்.எஸ்.எஸ்., சாரணர் படை, குட்டி காவலர், இசைக்குழுவினரின் அணி வகுப்பு நடந்தது. சுதந்திர தின பேச்சு, நடனம், தேசபக்தி பாடல்கள், கோகுலாஷ்டமி சிறப்பு நாடகம் நடந்தது. பள்ளி செயலாளர் கோபால் புராடியா, துணை செயலாளர் பாப்னா, நேரு மகா வித்யாலயா கல்லுாரி இணை செயலாளர் பரத்குமார் ஜெகமணி, பள்ளி முதல்வர் பங்கஜ், துரைசாமி, தர்மேந்திரா டி ஜெயின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
16-Aug-2025