பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் மஹா கணபதி, மாகாளியம்மன், கால பைரவர் கோவிலில் கும்பாபிேஷக விழா வரும், 24ம் தேதி நடக்கிறது.பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் மஹா கணபதி, மாகாளியம்மன், காலபைரவர் நுாதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிேஷக விழா வரும், 21ம் தேதி காலை, 9:00 மணிக்கு மஹா கணபதி ேஹாமத்துடன் துவங்குகிறது.தொடர்ந்து, லட்சுமி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், கோ பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன.வரும், 22ம் தேதி காலை, 9:00 மணிக்கு மேல், முளைப்பாரி மற்றும் தீர்த்தம் அழைத்து வருதல், விமான கலசஸ்தாபிதம், மாலை, 5:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகளும் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு முதற்கால மண்டப வேதிகா பூஜை, சிறப்பு ேஹாம பூஜைகள் நடக்கின்றன. தொடர்ந்து, 23ம் தேதி காலை, 8:00 மணிக்கு இரண்டாம் கால வேதிக மண்டப பூஜை உள்ளிட்ட பூஜைகளும், காலை, 11:00 மணிக்கு மேல் திரவியாஹுதி, விமான கலசஸ்தாபிதம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.மாலை, 5:00 மணிக்கு மேல் மூன்றாம் கால மண்டப வேதிகா பூஜை, இரவு, 700 மணிக்கு யாக சாலை, 108 மூலிகை பழங்கள், புஷ்ப, அன்ன ஆலய ஸகித ேஹாமம் உள்ளிட்ட பூஜைகள், இரவு, 10:00 மணிக்கு யந்திர பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. வரும், 24ம் தேதி காலை, 6:00 மணிக்கு மேல் நான்காம் கால மண்டப வேதிகா பூஜை, காலை, 9:00 மணிக்கு மேல் யாத்ரா தானம், கலசங்கள் புறப்பாடு, காலை, 9:30 மணிக்கு மஹா கணபதி, மாகாளியம்மன், கால பைரவர் விமானம், மூலாலய மஹா கும்பாபி ேஷகம் நடக்கிறது.தொடர்ந்து அலங்காரம், தீபாராதனை, தசதரிசனம், தசதானம், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், அன்னதானம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.