| ADDED : மார் 15, 2024 12:21 AM
கோவை;லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், 24 மணி நேரத்துக்குள் கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டுமென, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.கோவை லோக்சபா தொகுதியில், வடக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சுரேஷ் தலைமை வகித்தார்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், 24 மணி நேரத்துக்குள் அனைத்து கட்சிகளின் கொடிக்கம்பங்கள், சுவரொட்டிகள், கட்சி விளம்பரங்கள் என அனைத்தையும் அகற்ற வேண்டும். ஓட்டுச்சாவடிகளின் பெயர் மாற்றம் செய்திருப்பது, திசை மாற்றங்கள் மற்றும் கட்டடங்கள் மாற்றங்கள், 1,500 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரித்து, துணை ஓட்டுச்சாவடிகள் அமைப்பது குறித்து தெரிவிக்கப்பட்டது.மேலும், பூசாரிபாளையம், நேரு நகர் பகுதியில், 69 முதல், 73 வரையிலான ஓட்டுச்சாவடிகள் செயல்பட்டன. தற்போது தனியார் தொண்டு நிறுவனம் மூலம் முதியோர் இல்லம் செயல்படுகிறது. ஓட்டுப்பதிவுக்கு முன், வேறிடத்துக்கு மாற்றம் செய்து, அதே இடத்தில் ஓட்டுப்பதிவு நடைபெறும். கடந்த தேர்தலில் 40 சதவீதத்துக்கும் குறைவாக ஓட்டுப்பதிவு நடைபெற்ற ஓட்டுச்சாவடிகளில் இம்முறை அதிக ஓட்டுப்பதிவு நடைபெற வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒத்துழைக்க வேண்டும். கணபதி சி.எம்.எஸ்., மெட்ரிக் பள்ளியில் மாதிரி ஓட்டுச்சாவடி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டுச்சாவடி அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படும் என, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.