உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சர்வதேச ஜூனியர் ஹாக்கி போட்டி உலக கோப்பை அறிமுக விழா

 சர்வதேச ஜூனியர் ஹாக்கி போட்டி உலக கோப்பை அறிமுக விழா

கோவை: சர்வதேச அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டிக்கான கோப்பை அறிமுக விழா கோவையில் நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கான 14வது சர்வதேச அளவிலான உலககோப்பை ஹாக்கி போட்டி நடக்கிறது. சென்னை, மதுரையில் வரும் நவ.28 முதல் டிச.10 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த போட்டியில் முதல் முறையாக 24 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன. அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதி சுற்று சென்னையில் டிச.9 , 10 ஆகிய நாட்களில் நடக்கிறது. உலக கோப்பையை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். எப்ஐஎச் ஆண்கள் ஜூனியர் ஹாக்கி போட்டிக்கான கோப்பை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தலைநகரங்களிலும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்கென சிறப்பு சுற்றுலா பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் நேற்று இந்த கோப்பை எடுத்து வரப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள சுகுணா பள்ளியில் அறிமுக விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் பவன்குமார், கோவை எம்.பி.,ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, சுகுணா கல்வி நிறுவனங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, கோவை மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனைவரும், ஹாக்கி போட்டிக்கான லோகோவையும், கோப்பையையும் அறிமுகம் செய்து வைத்தனர். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை