உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சர்வதேச கிக் பாக்ஸிங் கோவை மாணவர்கள் பஞ்ச்

சர்வதேச கிக் பாக்ஸிங் கோவை மாணவர்கள் பஞ்ச்

கோவை;சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் கோவையை சேர்ந்த மாணவர்கள் ஏழு பதக்கங்கள் வென்றனர். வாக்கோ இந்தியா ஓபன் சர்வதேச கிக் பாக்ஸிங் போட்டி புதுடில்லியில் நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். தமிழக அணி சார்பில் பங்கேற்ற கோவையை சேர்ந்த ஐந்து மாணவர்கள் இரண்டு தங்கம், மூன்று வெள்ளி, இரண்டு வெண்கலம் என ஏழு பதக்கங்கள் வென்றனர். மன்சர் ஒரு தங்கம்; சஞ்சய் ஒரு தங்கம், ஒரு வெண்கலம்; தாரகேஷ் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்; அபிஷேக் ஒரு வெள்ளி; சிங்கத்தமிழன் ஒரு வெள்ளி வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ