மேலும் செய்திகள்
24 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
1 minutes ago
வடமாநில தொழிலாளி சடலத்தை விமானத்தில் அனுப்பியது போலீஸ்
1 minutes ago
வணிகமும் வீரமும் சேர்ந்த காவல் நகரம்
2 minutes ago
கோவை: வ.உ.சி., மைதானத்தில் நடைபெற்று வரும், 'வொண்டர் வேர்ல்ட்' பொருட்காட்சி பொதுமக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகிறது. புத்தாண்டு, பள்ளி விடுமுறையை முன்னிட்டு, '5 இன் 1 கான்செப்ட்' அடிப்படையில் வெறும் 100 ரூபாய் டிக்கெட்டில், 5 ஷோக்களை காணும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொருட்காட்சியில் அவதார் ஷோ, ஜுராசிக் வேர்ல்ட் ஷோ, மிராக்கிள் கார்டன் ஷோ, ஹாரர் ஹவுஸ் உள்ளிட்ட சிறப்பு காட்சிகள் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன. ராட்டினம், கண் சூட், குளுகுளு ஸ்னோ வேர்ல்ட், 9டி சினிமா போன்ற பொழுதுபோக்கு விளையாட்டுகளும் சிறுவர் மற்றும் இளைஞர்களிடையே, பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. உணவுப் பிரியர்களுக்காக டில்லி அப்பளம், ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளிட்ட பல்வேறு சுவைமிக்க உணவுக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. குடும்பத்துடன் மகிழ்ந்து வாங்குவதற்கான ஷாப்பிங் வீதிகளும் இடம் பெற்றுள்ளன. ஜன., 18 வரை நடைபெறவுள்ள, வொண்டர் வேர்ல்ட் பொருட்காட்சியை, பொதுமக்கள் கொண்டாடி மகிழலாம்.
1 minutes ago
1 minutes ago
2 minutes ago