| ADDED : ஜன 08, 2024 02:38 AM
கோவை;''நீட்' விவகாரத்தில் தி.மு.க., அரசியலை புகுத்தி மாணவர்கள், பெற்றோரை குழப்புவது சரியல்ல,'' என, த.மா.கா., தலைவர் வாசன் தெரிவித்தார்.கோவையில், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:பத்திர பதிவுத்துறையில் மனை விலையை நிர்ணயம் செய்வதற்கு, மறைமுக கட்டணங்கள் அதிகமாக கேட்கப்படுகின்றன. போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, தமிழக அரசு தீர்வு காண வேண்டும். 'நீட்' தேர்வில் தமிழக மாணவர்கள், பிற மாநில மாணவர்களுக்கு சவால் விடும் வகையில், சிறப்பாக செயல்படுகின்றனர். நீட் தேர்வு விவகாரத்தில், தி.மு.க., அரசியலை புகுத்தி மாணவர்கள், பெற்றோரை குழப்புவது சரியல்ல. கல்லூரிகளில் போதை பொருட்கள் நடமாட்டத்தை குறைக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பொங்கலுக்கு 3,000 ரூபாய் வழங்க வேண்டும். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு உதவ வேண்டும். மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லாமல், படிப்படியாக நிவாரண தொகை வழங்குகிறது. தி.மு.க., எதிர் கட்சியாக இருந்த போது, பொங்கலுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என்றது. ஆனால், தற்போது ரூ.1000 தான் வழங்குகிறார்கள். இவ்வாறு, அவர் கூறினார்.