உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கஞ்சா பதுக்கி வைத்திருந்த கல்லுாரி மாணவர்கள் கைது

கஞ்சா பதுக்கி வைத்திருந்த கல்லுாரி மாணவர்கள் கைது

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கஞ்சா பதுக்கி வைத்திருந்த இரு கல்லுாரி மாணவர்களை கோமங்கலம் போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி அருகே, திப்பம்பட்டி சுற்றுப்பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்ற நபர்களை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படிக்கும் இரு மாணவர்கள் என்பதும், பயன்பாட்டுக்காக கேரளாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.அவர்கள் வாயிலாக, மற்ற மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யப்பட்டதா என்பது குறித்து கோமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை