| ADDED : பிப் 27, 2024 11:19 PM
ஆனைமலை:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய் கிழமையில் கொப்பரை ஏலம் நடைபெறுகிறது. அதன்படி நேற்று கண்காணிப்பாளர் செந்தில் முருகன் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது.முதல் தர கொப்பரை, 248 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 80.01 ரூபாய் முதல், 84.26 ரூபாய் வரை விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை, 339 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு,46.00 முதல், 72.70 ரூபாய் வரை விலை கிடைத்தது.மொத்தம், 587 கொப்பரை மூட்டைகளை, 94 விவசாயிகள் கொண்டு வந்தனர். எட்டு வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். கடந்த வாரத்தை விட, 175 மூட்டைகள் அதிகரித்து காணப்பட்டது. விலை, கிலோவுக்க்கு, 37 பைசா உயர்ந்தது.விற்பனை கூட கண்காணிப்பாளர் கூறுகையில், ''ஆனைமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வரும் மார்ச் மாதம்,7ம் தேதி முதல் பிரதிவாரம் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெறும்.மார்ச் மாதம் முதல் கொப்பரை வரத்து அதிகமாக இருக்கும் என எதிர்பார்ப்பதால், வாரத்தில் இரு நாட்கள், 'இ - நாம்' ஏலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார்.