உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பாலசுப்பிரமணியர் கோவிலில் கிருத்திகை விழா

 பாலசுப்பிரமணியர் கோவிலில் கிருத்திகை விழா

மேட்டுப்பாளையம்: பழத்தோட்டம் பாலசுப்பிரமணியர் சுவாமி கோவிலில், கார்த்திகை மாத கிருத்திகை விழா நடந்தது. சிறுமுகை அருகே பழத்தோட்டத்தில் பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை மாத கிருத்திகை விழா நடந்தது. காலை, 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், அதைத்தொடர்ந்து பாலபிஷேகம், கால சந்தி பூஜை ஆகியவை நடந்தன. பத்து மணிக்கு ராமேகவுண்டன்புதூர் மகா மாரியம்மன் கலைக்குழுவின் வள்ளி கும்மி, கலை நிகழ்ச்சிகள், பயிற்றுநர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது. பின்பு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டினர், கிருத்திகை வழிபாட்டு குழுவினர், சிறுமுகை பழையூர் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை