உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அதிகாரிகளுக்கு பாராட்டு

அதிகாரிகளுக்கு பாராட்டு

சூலுார்:குடியரசு தின விழாவில், சிறந்த பணிக்கான சான்றிதழ்களை பெற்ற மூன்று அதிகாரிகளுக்கு, பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.கோவையில் நடந்த குடியரசு தின விழாவில், சூலுாரை சேர்ந்த மூன்று அதிகாரிகளின், சிறந்த பணியினை பாராட்டி, கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்.சூலுார் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) முத்துராஜூ, சுல்தான்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயகுமார் ஆகியோரின் சிறந்த பணிகளை பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இதேபோல், நெடுஞ்சாலைத்துறை கோவை கோட்ட கண்காணிப்பாளரான சூலுாரை சேர்ந்த ஜோட்டி குரியனின் அலுவலக பணிகள் மற்றும் சமூக சேவைகளை பாராட்டி, சான்றிதழ் வழங்கப்பட்டது.மூவருக்கும் அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ