பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஐயப்ப சுவாமி கோவிலில், வரும், 20ம் தேதி மஹா கும்பாபிேஷகம் நடக்கிறது.பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற, ஐயப்ப சுவாமி, மஞ்சள் அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா, நாளை காலை, 10:00 மணிக்கு மங்கள இசை, அனுக்ஞை, மஹா கணபதி ேஹாமம், தன பூஜை, கிராம சாந்தியுடன் துவங்குகிறது.வரும், 15ல் காலை, நவக்கிரக ேஹாமம், மாலை, வாஸ்து சாந்தியும் நடக்கிறது.16ம் தேதி காலை, திசா, சாந்தி ேஹாமம், அங்குரார்பணம் நடக்கிறது. 17ம் தேதி, காலை, மூர்த்தி ேஹாமம், சம்ஹிதா ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், மாலையில், கடஸ்தாபனம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை, பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன.வரும், 18ல் காலை, இரண்டாம் கால யாக பூஜை, 96 வகை திரவியங்களால் ேஹாமம், மதியம், ஐயப்ப சுவாமி, மஞ்சள் அம்மன், உபசன்னதிகளுக்கு செப்பு கலசம் பொருத்துதல் நடக்கிறது. மாலையில், வேதபாராயணம், மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது.வரும், 19ம் தேதி காலை, நான்காம் கால யாக பூஜை, மாலையில் ஐந்தகாம் கால யாக பூஜை, இரவு, ரக் ஷா பந்தனம், லட்சுமி பூஜைகள் நடக்கின்றன.வரும், 20ம் தேதி காலை, 5:30 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை, காலை, 8:45 மணிக்கு யாத்ரா கடம் புறப்பாடு நடக்கிறது. காலை, 9:25 மணி முதல், 10:00 மணிக்குள் மஹா கும்பாபிேஷகம், தசதானம், தச தரிசனமும், காலை, 11:00 மணிக்கு மஹா அபிேஷகம் நடக்கிறது. மாலையில், சுவாமி திருவீதி உலா நடக்கிறது. குண்டம் அமைப்பு
ஐயப்ப சுவாமிக்கு உத்தமபட்சயாக சாலை அமைத்து, நான்கு ஆவரணங்களில், 33 குண்டங்களும், மஞ்சள் அம்மனுக்கு ஒன்பது குண்டங்கள், விசாலாட்சி அம்பிகை சமேத காசி விஸ்வநாதருக்கு ஐந்து குண்டங்களும், பரிவார மூர்த்திகளுக்கு எட்டு குண்டங்களும் யாக சாலை அமைத்து பூஜைகள் நடக்கிறது.