| ADDED : ஜன 25, 2024 06:41 AM
கோவை : பாப்பநாயக்கன்பாளையம், நியூ சித்தாபுதுாரில் உள்ள ஜெகந்நாதப் பெருமாள் கோவிலில் நேற்று, மகா கும்பாபிஷேக விழா நடந்தது.காலை, 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியுடன் விழா துவங்கியது. காலை, 9:10 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் சேவித்தல் மற்றும் நாம சங்கீர்த்தனத்துடன், தீர்த்த கலச புறப்பாடு நடந்தது.தொடர்ந்து, கோபுர கலசங்கள், ஜெகந்நாதப் பெருமாளுக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இரண்டாயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று, மாலை 4:00 மணிக்கு, ஜெகந்நாத பெருமாள், விசேஷ அலங்காரத்துடன் திருவீதி உலா உற்சவம் நடக்கிறது. கோவிலில் இரண்டு வேளைகளிலும் வேத பிரபந்தம், இதிகாசங்கள், பூரணம் படலம் நடைபெறும். காலை, மாலை கோஷ்டி பிரசாதமும் நடைபெறும். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, இன்று முதல் தினமும், காலை, 7:00 மணிக்கு மண்டல பூஜை நடக்கிறது.