உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மனைவி கொலை:கணவனுக்கு ஆயுள்

மனைவி கொலை:கணவனுக்கு ஆயுள்

கோவை;மனைவியை அடித்துக்கொலை செய்த கணவனுக்கு ஆயுள்சிறை விதித்து, கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.கோவை சொக்கம்புதுார், கருப்பண்ணன் வீதியை சேர்ந்தவர் சேகர், 33. மனைவி சுகன்யா, 28. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக, சுகன்யாவை விட்டு சேகர் பிரிந்து சென்றார். குழந்தைகளுடன் சுகன்யா தனியாக வசித்து வந்தார். ஆனால், குழந்தைகளை பார்க்க அடிக்கடி வந்து சென்றுள்ளார். 2018, செப்., 22ல், சேகர் வந்த போது, உறவினர் ஒருவருடன் சுகன்யா பேசிக்கொண்டிருந்ததை கண்ட அவர், சுகன்யாவை தாக்கி கொலை செய்தார்.செல்வபுரம் போலீசார் சேகரை கைது செய்து, கோவை மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி பத்மா, குற்றம் சாட்டப்பட்ட சேகருக்கு, ஆயுள்சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் கணேசன் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி