உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மது விற்பனை: 3 பேர் கைது

மது விற்பனை: 3 பேர் கைது

நெகமம்;நெகமம் சுற்று வட்டார பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.நெகமம் சுற்று வட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில், பனப்பட்டி டாஸ்மாக் மதுக்கடை அருகே, புதுக்கோட்டையை சேர்ந்த அரவிந்த், 22, என்பவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரிடம் இருந்து, 21 மது பாட்டில்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.இதே போன்று, வடசித்துார் டாஸ்மாக் மதுக்கடை அருகில், சிவகங்கையை சேர்ந்த ரவிச்சந்திரன், 56, என்பவரிடம் 23 மது பாட்டில்கள் மற்றும் காட்டம்பட்டி டாஸ்மாக் மதுக்கடை அருகே துாத்துக்குடியை சேர்ந்த பேச்சிராஜா, 38, என்பவரிடம், 30 மது பாட்டில்கள் என மொத்தம், 74 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி