உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பூண்டி ஆண்டவரே காப்பாற்றினார்: யானையிடம் தப்பியவர் உருக்கம்

பூண்டி ஆண்டவரே காப்பாற்றினார்: யானையிடம் தப்பியவர் உருக்கம்

பேரூர்;'பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவரே என்னை காப்பாற்றினார்' என, யானையிடம் இருந்து உயிர் தப்பியவர் உருக்கமாக தெரிவித்தார்.கோவை, சாய்பாபாகோவில் வ.உ.சி., வீதியை சேர்ந்த கார் டிரைவர் சரவணன் கூறியதாவது:நேற்று மாலை (நேற்று முன்தினம்) காரில் பூண்டி சென்று கொண்டிருந்தேன். பூண்டி தண்ணீர் பந்தல் அருகே, மறைவில் இருந்து ஒரு யானை ஆக்ரோஷமாக வந்தது. வந்த வேகத்தில் தந்தங்களால் காரின் முன்பகுதியில் குத்தி துாக்கியது. இரு முறை காரை துாக்கி, துாக்கி போட்டது. உயிர் பயத்தில் கைகளை கூப்பி 'வெள்ளியங்கிரி ஆண்டவரே காப்பாற்று... சிவனே காப்பாற்று...' என, பலமுறை உரக்க வேண்டினேன். பிளிறியபடியே அந்த யானை என்னை, விட்டு விட்டு காட்டுக்குள் சென்றது. என்னை காப்பாற்றிய சிவனை தரிசித்தபின்பே, வீடு திரும்பினேன். இவ்வாறு, உருக்கமாக தெரிவித்தார்.பூண்டி மலையேற்றம் அடுத்த மாதம் துவங்க உள்ளது. அன்று முதல் பக்தர்கள் வருகை அதிகரிக்கும். இந்த சுற்றுப்பகுதிகளில் யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, பக்தர்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை, மாவட்ட வன அலுவலர் எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை