உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லாரி, கார் தீப்பிடித்து எரிந்தது

லாரி, கார் தீப்பிடித்து எரிந்தது

சூலுார்: சூலுார் அடுத்த காரணம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய எம் சாண்ட் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான டிப்பர் லாரி, நேற்று மதியம் திருச்சி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க்குக்கு எதிரில் சென்றபோது, திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது. நிர்வாகத்தினர் உடன டியாக சூலுார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் ராமசுப்பிரமணியன், முதன்மை தீயணைப்பு அலுவலர் ராஜகோபால் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர். கோவை, விளாங்குறிச்சியை சேர்ந்தவர் அருண், 41. தொழிலதிபர். இவர் சில மாதங்களுக்கு முன்பு பேட்டரி கார் புதிதாக வாங்கியுள்ளார். நேற்று மதியம் அன்னூரில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். எல்லப்பாளையம் பிரிவு அருகே செல்லும்போது சாலையின் நடுவில் வைக்கப்பட்டு இருந்த டிவைடர் மீது கார் மோதி கவிழ்ந்து தீ பிடித்தது. தகவல் அறிந்து அன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரன், வீரர்கள் மற்றும் பொதுமக்கள் காரில் சிக்கி இருந்த அருணை காரின் கதவை உடைத்து மீட்டனர். காரின் பெரும் பகுதி தீயில் எரிந்து நாசமானது. இதனால் சிறிது நேரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சம்பவ இடத்தில் அன்னூர் போலீசார் விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை