உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அனுமதியின்றி மண் கடத்திய லாரி பறிமுதல்

அனுமதியின்றி மண் கடத்திய லாரி பறிமுதல்

அன்னுார்; கோவை மாவட்ட கனிமவளத்துறை துணை தாசில்தார் கணேசன் தலைமையில், நேற்று அதிகாலை, கரியாம்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரே கவுண்டம்பாளையம் ஊராட்சியில் இருந்து, மூன்று யூனிட் மண்ணுடன் வந்த டிப்பர் லாரி பிடிபட்டது. லாரியில் மண் கொண்டு செல்ல எந்த ஆவணமும் இல்லை. இதையடுத்து கனிமவளத்துறையினர் லாரியை பறிமுதல் செய்து லாரி டிரைவர் சதீஷ்குமார், 31, என்பவர் மீதும், லாரி உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி