| ADDED : ஜன 28, 2024 10:56 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி சாய்பாபா காலனியைச் சேர்ந்த மகேஸ்வரி,58. இவர், இருசக்கர வாகனத்தில் ஜோதிநகர் அருகே வந்து கொண்டு இருந்தார்.அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், அவரது கழுத்தில் இருந்த, நான்கு பவுன் செயினை பறித்துச்சென்றனர். இது குறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.பொள்ளாச்சி அருகே கோலார்பட்டி சுங்கத்தை சேர்ந்த முருகன் மனைவி அம்சவேணி,32. இவர், இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார்.உடுமலை ரோடு பி.ஏ.பி., அலுவலகம் அருகே வந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், அவரது கழுத்தில் இருந்த, இரண்டு பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார்.இது குறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.போலீசார் கூறுகையில், 'இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகிய காட்சிகளை கொண்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.