உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புகார் நம்பரை அழித்து மர்ம நபர்கள் அட்டகாசம்

புகார் நம்பரை அழித்து மர்ம நபர்கள் அட்டகாசம்

நெகமம், ;வடசித்தூர், ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள ரேஷன் கடையில் புகார் தெரிவிக்கும் எண் அழிக்கப்பட்டு இருப்பதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.நெகமம் அருகே வடசித்தூரில், ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள முழு நேர ரேஷன் கடையில், 500க்கும் மேற்பட்ட மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குகின்றனர்.இந்த ரேஷன் கடையின் சுவற்றில், புகார் தெரிவிக்கும் கட்டுப்பாட்டு அறை மொபைல்போன் நம்பர் மற்றும் விற்பனையாளர் நம்பர் எழுதப்பட்டிருந்தது.தற்போது, இந்த கடையின் சுவற்றில், விற்பனையாளரின் மொபைல்போன் நம்பர் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. மற்றும் கோவை மாவட்ட கூட்டுறவு துறை கட்டுப்பாட்டு அறை மொபைல்போன் எண்ணில் ஒரு நம்பர் மட்டும் மர்ம நபர்களால் அழிக்கப்பட்டுள்ளது.இதனால், இந்த கடைக்கு வரும் ரேஷன் கார்டுதாரர்கள், கடை குறித்த புகார் எண் தெரியாமல் அவதி அடைந்துள்ளனர். எனவே, புகார் தெரிவிக்கும் எண் மற்றும் விற்பனையாளர் எண் ஆகியவற்றை மீண்டும் சுவற்றில் எழுத வேண்டும்.அப்போது, ரேஷன் கடை விற்பனையாளரை தொடர்பு கொண்டு, என்னென்ன பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்ள முடியும். புகார் தெரிவிக்க வேண்டிய எண் இருந்தால் தான், பொருட்கள் வினியோகத்தில் குளறுபடி இருந்தால், புகார் தெரிவிக்க முடியும்.இந்த மொபைல்போன் எண்கள் மக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காகவே, திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் உள்ளது. இந்த பிரச்னையில் உயர் அதிகாரிகள் கவனம் செலுத்தி, அறிவிப்பு பலகையில் எழுவதை அழிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை