மேலும் செய்திகள்
மாவட்ட சிலம்ப போட்டி 500 வீரர்கள் பங்கேற்பு
18-Aug-2025
கோவை; தமிழ்நாடு பாரா த்ரோபால் சங்கம் சார்பில் நான்காவது தேசிய அளவிலான பாரா த்ரோபால் போட்டி, சரவணம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்று நாட்கள் நடந்தது. இதில், தமிழ்நாடு, கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட, 12 மாநிலங்களை சேர்ந்த, 350க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டிகளில் ஆண் கள் மற்றும் பெண்களுக்கு என, தனித்தனியே போட்டிகள் நடந்தன. 'லீக்' முறையில் விறுவிறுப்பாக நடந்த போட்டிகளில், மாற்றுத்திறன் வீரர்கள் பந்தை எறிந்து லாவகமாக விளையாடினர். வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பதக்கம், சான்றிதழ்கள் நேற்று வழங்கப்பட்டன. இதில், தேர்வு செய்யப்பட்ட அணிகள், மலேசியா கோலாலம்பூரில் நடைபெறும், ஆசிய பாரா த்ரோபால் போட்டிகளில், பங்கேற்க உள்ளன. சர்வதேச பாரா த்ரோபால் பெடரேஷன் பொது செயலாளர் ஆல்பிரட் பிரேம்குமார், தமிழ்நாடு பாரா த்ரோபால் சங்க தலைவர் சரண் உள்ளிட்டோர் போட்டிகளை நடத்தினர்.
18-Aug-2025