உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வாலிபால் போட்டியில் நேஷனல் மாடலுக்கு கப்

 வாலிபால் போட்டியில் நேஷனல் மாடலுக்கு கப்

கோவை: பீளமேடு, நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில், 46வது சஹோதயா வாலிபால் போட்டி நடந்தது. 21 பள்ளிகளைச் சேர்ந்த 59 அணிகள் பங்கேற்றன. 19, 16, 14 மற்றும் 12 வயதிற்குட்பட்டோர் பிரிவில் போட்டிகள் நடந்தது. 19, 16 ஆகிய பிரிவுகளில் நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி முதல் இடத்தைப் பெற்றது. 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மூன்றாவது இடத்தையும், 12 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மூன்றாம் இடத்தையும், நேஷனல் மாடல் பள்ளி வென்றது. போட்டியை நடத்திய, நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்துக்கான கோப்பையைத் தட்டிச் சென்றது. இவ்வாண்டின் வெற்றியின் மூலம், இப்பள்ளி தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக இந்தப் பெருமைமிகு பட்டத்தை வென்று, ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ