உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஆட்சேபனை தெரிவித்தவர்களின் கட்டடங்களில் அதிகாரிகள் ஆய்வு

 ஆட்சேபனை தெரிவித்தவர்களின் கட்டடங்களில் அதிகாரிகள் ஆய்வு

அன்னூர்: கருத்து கேட்புக் கூட்டத்தில் ஆட்சேபனை தெரிவித்தவர்களின் கட்டடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவிநாசியில், இருந்து கருவலூர், அன்னூர், பொகலூர் வழியாக மேட்டுப்பாளையம் வரை, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி, 238 கோடி ரூபாயில் நடைபெற்று வருகிறது. இதற்காக சில இடங்களில் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அன்னூர் பேரூராட்சியில் கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் உரிமையாளர்களுக்கு, நோட்டீஸ் வழங்கி, இரு வாரங்களுக்கு முன்பு கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சிலர், 'நோட்டீஸில் தெரிவித்ததை விட கூடுதலாக மார்க்கிங் செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் தொட்டி மற்றும் செப்டிக் டேங்க் விடுபட்டுள்ளது என, பல்வேறு ஆட்சேபனைகளை தெரிவித்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை (நில எடுப்பு பிரிவு) சர்வேயர் மற்றும் அதிகாரிகள், அன்னூரில், அவிநாசி சாலை மற்றும் சத்தி சாலையில் கட்டடங்களை ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி