உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓமனில் ரூ.1.50 கோடி மோசடி; வாலிபர் சிறையில் அடைப்பு

ஓமனில் ரூ.1.50 கோடி மோசடி; வாலிபர் சிறையில் அடைப்பு

கோவை; போத்தனுாரைச் சேர்ந்தவர் யூனுாஸ். இவர், ஓமன் நாட்டில் எலக்ட்ரிக்கல் பொம்மை கடை நடத்துகிறார். சகோதரியின் மகனான, போத்தனுாரை சேர்ந்த முகமது சபீர், 35, வேலையின்றி இருந்தார். அவரை ஓமனுக்கு யூனுாஸ் அழைத்துச் சென்றார். குடும்பத்துடன் ஓமன் சென்ற முகமது சபீர், எலக்ட்ரிக்கல் கடையில் பணிபுரிந்து வந்தார். யூனுாஸ் அடிக்கடி பல்வேறு பகுதிகளுக்கும் தொழில் விஷயமாக சென்றதால், பூர்த்தி செய்யப்படாத காசோலைகளை முகமது சபீரிடம் கொடுத்து வைத்திருந்தார். நான்கு காசோலைகளை பயன்படுத்தி, ரூ.58 லட்சம் வரை சபீர் மோசடி செய்ததை அறிந்த, யூனுாஸ், முகமது சபீரை ஓமனில் இருந்து கோவைக்கு திருப்பி அனுப்பினார். ஆவணங்களை யூனுாஸ் மீண்டும் சரிபார்த்தபோது, ரூ1.50 கோடி வரை மோசடி செய்திருந்தது தெரியவந்தது. கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து மோசடியை உறுதி செய்ததும், முகமது சபீரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை