உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கரிவரதராஜ பெருமாள் கோவிலில் 31ம் தேதி மண்டல பூஜை நிறைவு

கரிவரதராஜ பெருமாள் கோவிலில் 31ம் தேதி மண்டல பூஜை நிறைவு

அன்னுார்:அன்னுார் பெருமாள் கோவிலில், கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா வரும் 31ம் தேதி நடக்கிறது.அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் இரண்டு கோடி ரூபாய் செலவில் மகா மண்டபம், முன் வளைவு, உள்ளிட்ட திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த டிச., 14ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வந்தது. 48 நாள் மண்டல பூஜை நிறைவு விழா வரும் 31ம் தேதி நடக்கிறது. காலை 9:00 மணிக்கு, விஸ்வக் சேனா பூஜை, சங்கல்பம், புண்ணிய வாசனம், அனைத்து சுவாமிகளுக்கும் திருமஞ்சனம், கலச ஆராதனை, சாந்தி ஹோமம் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு, அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், பெருமாள் கோவில் நற்பணி மன்றத்தினரும் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை