உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவமனையில் பாதைகள் அடைப்பு: நோயாளிகள் கடும் அவதி

அரசு மருத்துவமனையில் பாதைகள் அடைப்பு: நோயாளிகள் கடும் அவதி

கோவை;பணிகள் முடிந்து புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்ட பின்னரும் அரசு மருத்துவமனையில் பிரதான பாதைகள் அடைக்கப்பட்டுள்ளதால், நோயாளிகள், உறவினர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும், பல ஆயிரம் நோயாளிகள் வந்து செல்கின்றனர்.மருத்துவமனையில் நோயாளிகள், பார்வையாளர்கள் வந்து செல்வதற்கு இரு நுழைவாயில்கள் உள்ளன. மருத்துவமனையில் நடந்து வரும் ஜைகா திட்டப்பணிகளின் காரணமாக ஒரு பாதை மூடப்பட்டது. அனைத்து வாகனங்களும், ஒரே வழியாக சென்று வருவதால், மருத்துவமனையில் நெரிசல் தீராத பிரச்னையாக இருந்து வருகிறது.தற்போது மருத்துவமனையில், ஜைகா திட்டப்பணிகள் நிறைவடைந்து, புதிய கட்டடமும் இரு தினங்களுக்கு முன் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. ஆனால், மருத்துவமனையில் பல்வேறு பிரதான பாதைகளும் அடைக்கப்பட்டு இன்னும் யாரும் அவ்வழியாக செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. வார்டுகளுக்கு இடையே நோயாளிகள் மாற்றப்படும் போது, அருகில் உள்ள வார்டுகளுக்கு கூட, மருத்துவமனையை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.இதனால், நோயாளிகள், உறவினர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், அனைத்து வார்டுகளுக்கும் செல்ல ஒரே பாதை என்பதால், நோயாளிகள் வார்டுக்கு விரைந்து செல்ல முடிவதில்லை. நோயாளிகளின் நிலையை கருத்தில் கொண்டு, மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது:ஜைகா திட்டப்பணிகள் நிறைவடைந்துள்ளன. இருப்பினும், ரோடு பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதான நுழைவுவாயில் வழியாக தேவையில்லாத நபர்கள் வருகின்றனர். ''அதன் காரணமாகவே அதை அடைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நோயாளியுடன் வரும் ஒவ்வொரு உறவினரும் பைக்குகளில் வருவதால், மருத்துவமனைக்குள் அதிக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மற்றபடி அவசரமாக வரும் நோயாளிகளை புறநோயாளிகள் பிரிவு வரை அழைத்து செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. சிறு, சிறு பணிகள் மட்டுமே உள்ளன. விரைவில் அவை நிறைவடைந்து விடும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை