மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
5 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
5 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
5 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
5 hour(s) ago
கோவை: பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லுாரியின் தமிழ்த்துறை மற்றும் மாவட்ட தமிழ் இலக்கிய, சமுதாய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில், உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு பேரணி நடந்தது. காந்திபுரம் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி முன் இருந்து, பேரூராதினம் மருதாசல அடிகளார் மற்றும் தஞ்சாவூர் தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியம் பேரணியை துவக்கி வைத்தனர். கோவையை சேர்ந்த பல்வேறு கல்லுாரி மாணவர்கள், தமிழ் இலக்கிய அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். 'தாய் மொழியே ஆட்சி மொழி, தாய்மொழியே நீதிமன்ற மொழி' என்ற முழக்கங்களுடன் பேரணியில் அனைவரும் பங்கேற்றனர். பாரதியார் பல்கலை தமிழ்த்துறை தலைவர் சித்ரா, அனைத்திந்திய தமிழ்ச்சங்க பேரவை நிர்வாகி துரைசாமி, தமிழ் காப்புக்கூட்டியக்கம் தலைவர் அப்பாவு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago