உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.5 கோடியில் நவீன உணவு பகுப்பாய்வகம்: பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறப்பு

ரூ.5 கோடியில் நவீன உணவு பகுப்பாய்வகம்: பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறப்பு

கோவை:கோவை ரேஸ்கோர்ஸிலுள்ள, உணவு பகுப்பாய்வகம் மற்றும் நுண்ணுயிரியல் ஆய்வகம், அதிநவீன உபகரணங்களுடன் சுமார், 5 கோடி ரூபாய் செலவில் நவீனபடுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தை, பிரதமர் மோடி நேற்று, காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.கோவை ரேஸ்கோர்ஸிலுள்ள உணவு பகுப்பாய்வு கூடம், 1970ல் துவங்கப்பட்டது. தமிழகத்திலுள்ள ஆறு உணவு பகுப்பாய்வு கூடங்களில் ஒன்றாக, சிறப்பாக இயங்கி வருகிறது. இங்கு உணவுப்பொருட்களின் தரம், கலந்துள்ள ரசாயனம் மற்றும் நுண்ணுயிரிகள் அளவு குறித்து, பகுப்பாய்வு செய்து, மாவட்ட நியமன அலுவலர்களுக்கு அறிக்கையாக அனுப்பப்படுகிறது.கோவையில் இயங்கும் உணவு பகுப்பாய்வு கூடம் மூலமாக சென்னை, துாத்துக்குடி, விருதுநகர் மற்றும் திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களிலிருந்து, பெறப்படும் உணவு மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்படுகிறது.இந்த ஆய்வகத்தில், மாதம் தோறும், 500 முதல் 600 உணவு மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. இந்த ஆய்வகம், மத்திய அரசு நிதி உதவி திட்டத்தின் கீழ், ரூ.4.63 கோடியில் 1,350 சதுர அடி பரப்பளவில், அதிநவீன உபகரணங்களுடன்மேம்படுத்தப்பட்டுள்ளது.இந்த ஆய்வகத்தை, பிரதமர் மோடி காணொலி வாயிலாக, நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு உணவு பகுப்பாய்வுத்துறை இயக்குனர் மற்றும் உதவி கமிஷனர் தேவபார்த்தசாரதி, உணவு பாதுகாப்புத்துறை கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன், தேசிய உணவு ஆய்வகம் சென்னை உதவி இயக்குனர் மாயா, மாவட்ட உணவு பகுப்பாய்வாளர் ஷீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலக வளாகத்திலுள்ள, பல்வேறு துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ